செவ்வாய், 20 டிசம்பர், 2011

உடையும் நிலையில் கேரள அணை - வீடியோ

முல்லை பெரியார் அணை நாளையே உடையபோவது போலவும், லட்சக்கணக்கான மக்கள் சாவபோவது போலவும் கேரளா அரசியல்வாதிகள் சரடு விட்டுக் கொண்டிருக்கும் வேலையில் ஒரு புதிய தகவல் வந்திருக்கிறது.


கேரளாவில் உள்ள அணைகளிலேயே முல்லை பெரியார் தான் மிகவும் பலமாக உள்ளதாகவும், என்றைக்கோ இடித்திருக்க வேண்டிய அணைகள் இன்னமும் உபயோகத்தில் உள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.


ஆங்கில செய்தி தொலைக்காட்சி ஒன்றில் வெளியான வீடியோ பதிவு ஒன்று கிடைத்துள்ளது. கேரளாவில் நெய்யாற்றில் 1950 இல் கட்டப்பட்ட அணை ஒன்று 200 அடிக்குமேல் பெரிய விரிசல் விழுந்துள்ளது. ஆனால் அந்த அணையை இடிக்காமல் இன்னமும் பயன்படுத்தி வருகிறார்கள்.


ஒருவேளை முல்லை பெரியார் உடைந்தால், அந்த நீர் இடுக்கி அணை செல்லும் வழியில் வெறும் 450 குடும்பங்கள் மட்டுமே உள்ளன(கேரள அரசியல்வாதிகள் விடுவது டுபாக்கூர் என நிரூபணம் ஆகி உள்ளது ) ஆனால் உண்மைலேயே நிறைய மக்களுக்கு ஆபத்தான பாடாவதியான அணையை பற்றி அவர்கள் யாருமே கவலைப்படவில்லை. ஏனெனில் அதை வைத்து அரசியல் செய்ய முடியாது.


நீங்களே இந்த வீடியோவைப் பார்த்துவிட்டு கருத்து சொல்லுங்கள்.


எண்ணமும் கருத்தும் , மோகன் .


3 கருத்துகள்:

  1. அதைப்பத்தியெல்லாம் அவர்களுக்கு என்ன கவலை...

    முல்லைபெரியாறு அணை மட்டுதாம் அவர்களுக்கு தெரியும்...

    தாங்கள் சொன்னதுபோல் அரசியல் செய்ய உகந்த வாய்ப்பு இதில்தான் இருக்கிறது...

    பகிர்வுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  2. கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…
    karutthukku nandri..!

    பதிலளிநீக்கு